Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

வாகனங்களுக்கான இறக்குமதித் தடை  நீக்கம்….!

பொதுப் பயணிகள் போக்குவரத்திற்குத் தேவையான வாகனங்களுக்கான இறக்குமதித் தடைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பேருந்துகளை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஏனைய வாகனங்களுக்கான தடை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி...

விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி…!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகிய ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர்…!

இரத்மலானை புகையிர நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த இரண்டு திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகி ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, இரத்மலானை புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த திருடர்கள் இருவர் ரயில் பெட்டிகளின் உதிரிபாகங்களை திருடிச் செல்ல முயன்ற போது அதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்பு பிரிவின்...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர்...

மூன்று பிரதான வேட்பாளர்களினது ஆதரவு தொடர்ந்தும் 30 வீதம்…!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் ஆதரவு தொடர்ந்தும் 30 வீதத்திலேயே காணப்படுவதாக  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலிற்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில்  பிரதான வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. மூன்று பிரதான வேட்பாளர்களும் தாக்குதல்கள் பதில் தாக்குதல்களிலும், வாக்குறுதிகளை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் வாக்குறுதிகள் உச்சக்கட்டத்தை அடைந்தன.ஒவ்வொருவரும் சம்பள...

அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதமாக கருத்து தெரிவிக்கவில்லை; எம்.ஏ.சுமந்திரன்…!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதமாக கருத்து தெரிவிக்கவில்லையென தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போது மாற்றம் தொடர்பிலும், தெற்கிலே மக்கள் மாற்றமொன்றை...

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது; மத்திய வங்கி…!

சுற்றுலாத்துறையின் வருவாய் கடந்த ஓகஸ்ட் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 652 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 09 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர்களில் 08 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க...

மார்ச் 12 இயக்க விவாதத்தில் கலந்துகொள்ளாத 3 வேட்பாளர்கள்…!

'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி விவாதத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் கலந்துக்கொள்ளவில்லை. 'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே கலந்துக்கொண்டுள்ளார். குறித்த விவாவத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித்...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்;உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிறு (06)  ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர்...