Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு தொடர்ந்து வளரும்; ஜீவன் தொண்டமான்..!

இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு தொடர்ந்து செழித்து வளரும் என்பது எனது இடைவிடா நம்பிக்கை என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் சார்பில் மலேசியாவின் 67வது தேசிய தின நிகழ்வு  கொழும்பு ஒன் கோல்பேஸ் விருந்தகத்தில் நடைபெற்றது. இந்த...

இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது..!

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 38 மற்றும் 55 வயதுடைய இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கைது...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100...

சஜித்திற்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பமாகிய சென்னை-யாழ்ப்பாண இண்டிகோ விமான சேவை…!

சென்னையில் இருந்து யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு இன்று (01.09) முதல் ஆரம்பித்த இண்டிகோ (IndiGo) விமான சேவையின் முதல் விமானம் சற்று முன்னர் 3.10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது.  இதன்போது போது விமானத்துக்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் alliance air, Indigo என இரண்டு விமான சேவைகள் தினசரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்படவுள்ள அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம்…!

2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தரம் III அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 5450 ரூபாவினாலும், தரம் II அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 8,760 ரூபாவினாலும், தரம் I அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 10,950 ரூபாவினாலும்...

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம்…

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலை அருகே இடம்பெற்று இருந்தது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள்...

அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார்; டில்வின் சில்வா…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் இந்த வாக்கு வீதம் அதிகரிக்கும் என்றும், கருத்து கணிப்புகளை விடவும் வாக்கு வீதம் அதிகமாக கிடைக்கும்...

இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் விரும்புகின்றன; ராஜித சேனாரத்ன…!

இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி…!

குருநாகல் குளியாப்பிட்டிய பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்மலேவத்த பிரதேசத்தில் வீடொன்றினுள்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையாளிக்கு எதிராக குளியாபிட்டிய நீதிமன்றில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகின்றது. குறித்த பகுதியில் இடம்பெற்ற இசை கச்சேரி ஒன்றில் கலந்து...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...