Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

அனாவசிய அழைப்புக்களில் நம்பிக்கையை ஏற்படுத்தி ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரிப்பு..!

யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு தொடரும் மோசடிகளில் பலருடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இவ் விடயம் தொடர்பாக வணிகர் கழகம் அறிக்கையொன்றை...

இன்றைய நாளுக்கான வானிலை…!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (28.07) அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் உள்ள நெடுநாள் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு...

க்ளப் வசந்த மனைவியின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம்…!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவரை வழக்கமான வார்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெட்டூ...

ரவுடி கும்பல் ஒன்றினால்  வாளால் வெட்டி சித்திரவதைக்கு உட்பட்ட இளைஞன்..!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று நேற்று(26) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி...

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக்கிரியை…!!

நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. இன்று (27.07) பிற்பகல் 5.00 மணியளவில் பொரளை பொதுமயானத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான விக்ரமபாகு கருணாரத்ன தனது 81ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை (25.07) அதிகாலை காலமானார்.

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி… !!

கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்மடுல்ல - நோனாகல வீதியில் மல்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதி கவிழ்ந்து பின்புறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது...

போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது…!!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருனியாவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி, குருனியாவத்தை பகுதியில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞரே கைதாகியுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக...

யுக்திய நடவடிக்கையின் கீழ் 720 பேர் கைது….!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 720 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 702 ஆண்களும் 18 பெண்களும் அடங்குகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 21 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 27 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 190...

கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது…!

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொரகொலயாய பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எம்பிலிப்பிட்டிய, தொரகொலயாய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேக நபரிடமிருந்து 24,730...

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம்…!

பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிலர் வாகனமொன்றை சோதனை செய்யும் சந்தர்ப்பத்தில் வாகனத்தினுள் கஞ்சாவை வைத்து இளைஞர் குழுவொன்றிடம் சர்சசையில் ஈடுபட முயற்சித்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது. இந்நிலையில், சோதனை செய்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் சிலருள் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கஞ்சா பொதியை பொலிஸாருக்கு...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...