Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மஹிந்த ராஜபக்சவிற்கு அழுத்தம்…!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதியுயர் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்க வேண்டுமென சாகல ரத்நாயக்க மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அரசியல் உயர்பீடத்துடன்...

வாக்காளர்களிற்கு அறிவித்தல்… !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்கலாம் என ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த...

41 ஆம் ஆண்டு கறுப்பு யூலை நினைவேந்தல்..!

கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தலும் பொதுக் கூட்டமும் யாழில் நேற்று மாலை நடைபெற்றது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் தலைமையில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இவ் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் போது கடந்த 1983 ஆம் ஆண்டு ஜீலை 25-27...

நாட்டின் இருவேறு பகுதிகளில் இருவர் நீரில் மூழ்கி பலி….!

நாட்டின் இருவேறு பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம கலா ஏரியில் நீராடச் சென்ற 47 வயதான ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதேவேளை, எஹதுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகுலேவ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகுலாவ பிரதேசத்தில் வசித்து வந்த 58...

எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார், மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து… !

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார், மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று (27.07) மாலை இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினரின் கார், கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன்  மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், எம்.பி.யின் வாகனத்தின்...

தையல் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாமூலை பகுதியில் அமைந்துள்ள வித்தியா தீபம் என்ற புலம்பெயர் தமிழர்காளல் உருவாக்கப்பட்ட கல்வி மற்றும் தற்சார்ப்பு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நலிவுற்ற எம்மை தற்சார்பே காக்கும் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட வித்தியா தீபம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது கட்ட மாணவர்களுக்கான ஆறுமாத கால தையல் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வளங்கும்...

தேர்தலுக்கான ஆரம்ப அச்சிடும் பணிகள் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் உதவி தேர்தல்...

விமான நிலையத்தின் சுங்க அதிகாரி உயிரிழப்பு..!

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் ஓய்வறையில் இருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரி டபிள்யூ.என்.எஸ்.விஜேதுங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிப்பு – பொது அமைப்புக்கள் முறைப்பாடு – எந்த நடிக்கையும் எடுக்கப்படவில்லை..!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு  அளவில் தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரதேச  கமக்கார அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்கள்  நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளி்டட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தும் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிறுத்தப்படவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கனகாம்பிகைகுளத்தின்...

சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினரது   ஊடக சந்திப்பு..!

வடக்கு கிழக்கு மாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் கழகத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த சக்கர நாற்காலியில் துடுப்பாட்டம் விளையாடக்கூடியவர்களை உள்வாங்கி குறித்த கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த துடுப்பாட்ட அணியின் தலைவர் M.முகமட் அலி கருத்து தெரிவித்தார்.தேசிய ரீதியில் சென்று...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...