Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன..!

தற்போது எமது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அக்காலத்தில் நடத்தி முடிக்கப்படாமல் இருந்த திட்டங்களை நாங்கள் தற்பொழுது நடத்தி முடிப்பதற்கான நிதிகள் எங்களிடம் கிடைக்க பெற்றுள்ளது. என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்..!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த விடயத்தை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கபில்டன் போல் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப் போராட்டத்தின் நோக்கம் எமக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி  எதிர்கால  இளைய தலைமுறைகளும்...

கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட யாழ். இளைஞன்: வெளியான அதிர்ச்சித் தகவல்..!

அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 06 ஆம் திகதி டொராண்டோ ஸ்கார்பரோ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிய...

சிறைக்கைதிகளைப் பார்வையிட சந்தர்ப்பம்..!

119ஆவது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகதி சிறைக்கைதிகளைத் திறந்த வெளியில் சந்திப்பதற்கு உறவினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளியான பொது தகவல் தொழில்நுட்ப பெறுபேறுகள்..!

வெளியான பொது தகவல் தொழில்நுட்பம்  2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்து!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. துவிச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் சற்றே விலக முற்பட்டுள்ளது.  அவ்வேளையில் கார் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

ஜனாதிபதித் தேர்தல் அச்சுப்பணிகளுக்காக மில்லியன் ரூபா செலவாகலாம் – அரச அச்சகம் தெரிவிப்பு..!

ஜனாதிபதித் தேர்தல் அச்சுப்பணிகளுக்காக அதிகபட்சம் 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகுமென அரச அச்சகம் தெரிவிக்கின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், வாக்குச்சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பான பத்திரங்கள் அச்சிடப்படும்...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம்..!

பென்ஸில் வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்ப் கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம், அவரின் மெய்பாதுகாவளர்களினால் மேடையில் இருந்து இடைநடுவில் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு எந்த...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து இன்றும் (13) இரண்டு மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!  இதுவரை 47 மனித எச்சங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் இன்றைய (13) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில்  இரண்டு மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள்  இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்டார்..!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (13)  முன்னெடுக்கப்பட்டு வருகிறது முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ  குழுவினர், தடயவியல் பொலிஸார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வாய்வு...
- Advertisement -

Latest News

வாகன இறக்குமதி கொள்கைகளை இலகுப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை வாகனத் துறையின் சீரான செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும், இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் இருவருக்கும் நன்மை பயக்க தேவையான கொள்கை மாற்றங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும்...