பென்ஸில் வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்ப் கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம், அவரின் மெய்பாதுகாவளர்களினால் மேடையில் இருந்து இடைநடுவில் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார்.

அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர்களில் ஒருவர் அந்தநாட்டு பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here