Monday, July 13, 2026
No menu items!

News Line

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு..!

கம்பளை நகரத்தின் அம்பகமுவ வீதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனின் பெற்றோர் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் விடுமுறைக்காக கம்பளை பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது இந்த சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில்...

ரணில் மற்றும் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச உட்பட அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலைப் பெறும் மொட்டுக் கட்சியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில்...

மின்னல் தாக்கி முதியவர் பலி..!

மொனராகலை - அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி 65 வயதுடைய முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்  சம்பவம் தொடர்பில் தெரியவருவகையில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கத்திக்குத்து..!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார். தேவாலயத்தின் ஆராதனை  சமூக வலைதளங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சொந்த சாதனையை முறியடித்த SRH..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில்...

கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!

இத்தாலி நாட்டுக்கு சொந்தமான கொஸ்டா டெலிசியோசா(Costa Deliziosa) என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் ஊடாக பிரித்தானியா , ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(15)வருகை தந்துள்ளனர். அவர்கள் காலி மற்றும்...

மக்கள் வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

போலியான குறுஞ்செய்தி மூலம் இடம்பெறும் மோசடி தொடர்பில்  மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பண்டிகைக் காலத்தில் நீங்கள் பெற்ற அல்லது பெறவிருக்கும் ஒரு பொருளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில், உங்கள் தகவல் மற்றும் வங்கி அட்டை விவரங்களை வழங்குமாறு ஒரு மோசடியான குறுஞ்செய்தி பரப்பப்படுகிறது. எனவே மக்கள்...

தீப்பற்றி எரிந்த அமைச்சரின் வாகனம்..!

பண்டாரவளை - ஹல்பே பிரதேசத்தில் இன்று (16) அதிகாலை 12.45 அளவில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த வாகனம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை மாநகர தீயணைப்புத் திணைக்களம், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்போது அவரது வாகனம் பலத்த...

வெற்றியுடன் சென்னை அணி..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது. முதலாது போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் லக்னோ சுப்ப்ர் கைண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது...

40 வயது காதலனின் வெறியாட்டம்..!

பொலனறுவை மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது நிலை...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...