Monday, July 13, 2026
No menu items!

News Line

4 மணித்தியாலத்தியத்துக்குள் 8 வீதி விபத்துக்கள்..!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதியின் கவனக்குறைவு காரணமாக இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாரதிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பெண் உயிரிழப்பு..!

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த...

புத்தாண்டில் வெடித்த மோதல்..!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பட்டா ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுமே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம்...

மீண்டும் ஜப்பானின் சனத்தொகை விகிதம் குறைந்தது!

ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 0.48 வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது.உள்விவகார அமைச்சு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜப்பானில் தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டளவில் 47 சதவீதமாக அதிகரிக்கும் என ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி...

இஸ்ரேல் மீதான அதிரடி தாக்குதலை ஆரம்பித்த ஈரான்..!

 இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகனை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவை தங்கள் இலக்குகளை அடைய சில மணிநேரம் எடுக்கும் என்று இஸ்ரேலின் இராணுவம் கூறியது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த நேரடி தாக்குதல் அரேபிய பிராந்தியத்தில் ஒரு பெரிய விரிவாக்கத்தைத் தூண்டக்கூடும், என அச்சம் நிலவுகிறது.

எயார் கனடா விமான சேவை நிறுவனம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு..!

கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எயார் கனடா விமானம் உள்ளுர் நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 4.25 மணிக்கு பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.எனினும் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளின்...

புத்தாண்டில் வெடித்த மோதல்..!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பட்டா ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுமே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம்...

தீ விபத்தில் சிக்கி பெண் ..!

 திம்புலபதன - கொட்டகலை பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் அறையொன்றில் தீ பரவியதாகவும், தீயினால் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்..!

புத்தாண்டை  முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்களுக்காக இன்று மற்றும் நாளை விசேட பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 25% இன்றைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

வயிற்றுவலி ஏற்பட்ட இளம் ஆசிரியை உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை, வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதையுடைய கோவிந்தசாமி கல்பனா என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது இந்நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...