Monday, July 13, 2026
No menu items!

News Line

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை..!

புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் ஆபாசமான அல்லது கலாச்சாரத்திற்கு முரணான வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தும் வகையில் போட்டிகளை நடத்துவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதுபோன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அந்த...

பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் உயர்வு..!

நாட்டில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதுடன்  வானவெடி, விசில் பட்டாசு போன்றவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பட்டாசு வெடிக்கும்...

நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து  ஆணின் சடலம் மீட்பு..!

கிளிநொச்சி பொலிஸ் பிரவுக்குட்பட்ட பெரியபரந்தன் பகுதியிலுள்ள நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து  ஆண் ஒருவரின் சடலம் இன்றையதினம்(12) மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை  கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன் 342,883 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இந்நிலையில், பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்...

ஜனாதிபதித் தேர்தலில் பசில்..!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனன் சார்பில் பசில் ராஜபக்ச  களமிறக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார  கோரிக்கை விடுத்துள்ளார். பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. அவர் இந்நாட்டில் வேலை செய்து காட்டியவர், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பசிலைப் பற்றி...

63 வயது இரகசிய காதலனுடன் கணவரை கொலை செய்த மனைவி..!

அக்கரைப்பற்று பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் 33 வயது மனைவி மற்றும் 63 வயதுடைய இரகசிய காதலன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட இச் சம்பவம் கொலையாக...

அஸ்வெசும தொடர்பில் அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை 2500 ரூபாய், எதிர்வரும் திங்கட்கிழமை (15) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி 182,000 குடும்பங்களுக்கு சுமார் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் கொடுத்து முடிக்கப்படும். கேகாலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பயனாளிகளுக்கான...

01கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் மூவர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்களுடன் மூன்று பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது  கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள், சிகரெட்டுகள், Apple Smart கைப்பேசிகள், தொலைபேசி உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களுடன் குறித்த மூவரும்...

மாடுகளை கடத்தி சென்ற லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு..!

மாத்தறை - கனங்கே பகுதியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கனங்கே - ரஜமஹா விகாரைக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பசு மாடொன்றை ஏற்றிச் சென்ற லொறியினை சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும், உத்தரவை மீறி லொறி சென்ற நிலையில் லொறியை  குறி வைத்து பொலிஸார்...

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு..!

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை  மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்thullaர். மேலும் பண பரிவர்த்தனை செய்யும் போது பணத்தாளில் மாற்றம் இருந்தால்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...