Monday, July 13, 2026
No menu items!

News Line

தடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிளின் பாகங்கள்..!

தடைசெய்யப்பட்ட  மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் எனவும் பூகொடை பொலிஸ் நிலையத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் பொலிஸருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பணத்திற்காக இளைஞரை ஏமாற்றி கிளிநொச்சி யுவதி..!  

கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு திடீரென தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையிலான உறவு, திருமண நிச்சயதார்த்தத்தில் முடிந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. மேலும் குறித்த யுவதிக்கு குறித்த இளைஞன் 60 இலட்சம் ரூபா பணம், 42 பவுண் நகை, பரிசுப் பொருட்கள்...

பெருந்தொகை பணமோசடி செய்த பெண்..!

மொனராகலை பிரதேசத்தில் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர் கோட்டை ரஜமஹா விஹார மாவத்தையில் வசிக்கும் 55 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல்...

யாழ்ப்பாணத்தில் துயரம்..!

யாழ்ப்பாணத்தில் காதலி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்து 50ஆவது நாளில் காதலனும் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் காதலியை இழந்த துயரத்தில் இருந்து வெளிவர முடியாமல் அவரது இல்லத்தில் நேற்றையதினம்(09) தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்...

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் இரசாயனம்! மக்களுக்கு எச்சரிக்கை..!

இலங்கையின் சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனப் பொருட்களைச் சேர்ப்பதுடன் பட்டர் கேக்...

வெற்றியை நோக்கிய பயணத்தில் சென்னை..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(kolkata knight riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை  அணி...

உலகமே பார்வையிட்ட அரியவகை சூரிய கிரகண காட்சி..!

வடக்கு அமெரிக்காவை நேற்று (08) கடந்து சென்ற பூரண சூரிய கிரகணத்தை மில்லியன் கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர். பூமிக்கும் சூரியனுக்கு நடுவிலான பாதையில் சந்திரன் பயணித்து, பூமியின் பார்வையிலிருந்து சூரியனை முழுமையாக மறைக்கும் போது பூரண சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் 32 மில்லியன் அளவிலான மக்கள் நேற்று ஏற்பட்ட இந்த பூரண...

இலங்கையில் தலைமறைவாகியிருந்த ரஸ்ய பெண்..!

இலங்கையில் தலைமறைவாகி இருந்த ரஸ்ய  பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு ரஸ்யாவில் பத்து மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவை சேர்ந்த அலெனா அகபோனோவா எனப்படும் 23 வயதான பெண் ஊடகவியலாளர் ரஸ்யாவின் புகழ்பெற்ற போர் சிலையின் மார்பகத்தை கொச்சைப்படுத்தியதன் குற்றத்திற்காகவே இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இந்த பெண், கடந்த ஆண்டு தென்மேற்கு ரஸ்யாவில் உள்ள 'தாய்நாடு அழைக்கிறது' எனப்படும்...

கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர்..!

கண்டி-கட்டம்பே, தியகடனாதோட்டை விகாரையில் ஒருவர் தாக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விகாரையின் தலைவரான தேரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மெனிகின்ன பிரதேசத்தைச் சேர்ந்த சமில சுதிர ரத்நாயக்க  என்ற முன்னாள் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆலய வளாகத்தினுள் பிரவேசித்த போது...

அழகாக முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

கொழும்பில் நுகர்வோர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப்பொருட்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஜயந்தி விஜேதுங்க, சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் எரசிங்க, அதிகாரசபையின் விசாரணை...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...