Thursday, May 28, 2026
No menu items!

News

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரா?  சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக எவரிடமும் தெரிவிக்கவில்லை என நேற்றைய தினம் நடைபெற்ற  ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், ’’அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை செயற்படுத்தவுள்ளதாவே தான் கூறியதாகவும் , மேலும் ஊடகவியலாளர் ஒருவர், உங்களை களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால்! உங்களது நிலைப்பாடு...

யாழில்.கப்டன் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி

யாழ்ப்பாணம்  பொன்னாலை பகுதிகளில் நேற்று (28) வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில்  இறைவனடி சேர்ந்த தென்னிந்திய பிரபல நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த்க்கு கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கங்கள்

மாலைதீவு அருகே வெள்ளிக்கிழமை (29) காலை இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) குறிப்பிட்டுள்ளது. முதலாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம்  4.8 ரிச்டர் அளவில்  10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து...

மலையக ரயில் தடம்புரண்டது : சேவைகளில் பாதிப்பு

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை  (29) சேவையிலிருந்த ரயில் தடம் புரண்டதால், மலையக  ரயில்  சேவைகள்  தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி  ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. பொடிமனிக்கே ரயிலின் என்ஜின் பகுதியும் பின்பெட்டியுமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. மேலும், அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை மற்றும்  ரயில்ப்பாதையில் சேறும் சகதியுமாக காணப்படுவதால், ரயில்வே போக்குவரத்தில் தடைகள்...

இலங்கை குழாம் தெரிவு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன. இதில் ஒருநாள் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி ஒன்று தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்தக் குழாத்தில் இருக்கும் வீரர்களில் இருந்தே 15 வீரர்களைக் கொண்ட இறுதி குழாம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும்...

பெப்ரவரியில்  மின்கட்டணம் குறைக்கப்படும் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெறுமதிசேர் (வற் )வரி மின்கட்டணத்துக்கு தாக்கம் செலுத்தாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்தார். தொடர்ந்தும் அவர்  கூறுகையில், மின்கட்டணத்திருத்தம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நீர்மின்னுற்பத்தி, நிலக்கரி மற்றும் எரிவாயுவுடனான மின்னுற்பத்தி மற்றும் அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம்...

இன்றும் மழையுடனான வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப்...

கெப்டன் விஜயகாந்த் காலமானார்!

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார். மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இனிக்கும் இளமை எனும் படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான...

முல்லைத்தீவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வயல்காணி ஒன்றில் 4,500 துப்பாக்கி ரவைகள் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது. வலைஞர்மடம் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் T- 56 ரக துப்பாக்கி ரவை பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகைதந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர். T-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக...

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால் நேற்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அதிபர் சேவை சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்கள். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...