Tuesday, July 14, 2026
No menu items!

News

தொற்று நோயால் உயிரிழந்த  சிறைக்கைதி

தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாத்தறை சிறைக் கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (22) குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்தார். மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த...

தேசிய மாநாடு குறித்து சி.வி.கே. சிவஞானம் கருத்து

சூறாவளி அல்லது சுனாமி அடித்தாலே தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமென்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 18 ஆம்...

இம்ரான் கானுக்கு பிணை

அரச இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றவாளிகளான இம்ரான் கான் மற்றும் அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரோஷி ஆகியோர் சார்பில் பிணை கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை...

நாட்டில் பரவிவரும் JN.1 கோவிட்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்ய சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார். JN.1 கோவிட்டானது, ஒமிக்ரோன் கோவிட்டின் துணை வகையாககும் இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம்,...

தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான  T20 தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம்(22)  பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும்...

நாட்டில் சில இடங்களில் இன்றும் மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும், மற்றும்  வடமத்திய மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்பகுதிகளின்...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று (22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன்...

புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ரியல் மெட்றீட்

நடைபெற்றுவரும் லா லீகா சுற்றுப் போட்டியின் இன்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது. இதன் முதல் போட்டியில் மலோர்கா மற்றும் ஒசசுனா அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒசசுனா அணி சார்பாக பப்லோ இபானெஸ் மற்றும் ரௌல் ஆகியோர் தலா ஒரு கோலையும் பெற்றனர். மலோர்கா அணி சார்பாக...

ஜனாதிபதியிடம் கடும் தொனியில் உரையாற்றிய சம்பந்தன்

அரசியல் தீர்வற்ற வெறும் 'நல்லிணக்கக் கொடி'யைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள் என நேற்று (21) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற, ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இரா சம்மந்தன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வடக்கு- கிழக்கு...

காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்

காசா பகுதி முழுவதிலும் கடந்த செவ்வாய் கிழமை  இஸ்ரேல்  நடார்த்திய வான்வழித்தாக்குதலில் ஒரே நாளில் சுமார் 100 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக  சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். மேலும், காசாவில் நிவாரண பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவதோடு, உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது...
- Advertisement -

Latest News

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும்...