Thursday, July 16, 2026
No menu items!

News

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய போராட்டம்

சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் அடாவடியை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் , போராட்டத்தில்...

கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது ஜனாதிபதி தெரிவிப்பு

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், கடந்த வருடம்  சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ​​நாம் வங்குரோத்து நாடாக முத்திரை குத்தப்பட்டிருந்தோம்ன் இருப்பினம் இவ் வருட  சுதந்திர தினத்திற்குள் அந்த நிலையிலிருந்து விடுபட்டு பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடிந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய போக்கு முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், அதே பாதையில் தொடர்ந்து...

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் பூர்த்தி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று(04) காலிமுகத்திடலில் நடைபெற்றது. 'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார். சுதந்திர...

வவுனியா பொலிஸாரின் மீது தாக்குதல்

வவுனியா - புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில் சென்றுள்ளனர். இதன் போது குறித்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற நபர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதிவான்...

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நாளை 4 ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி அந் நாளில் கிளிநொச்சி நகரில் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளனர். மேலும், போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது எனவும்  அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்தி  விடுத்துள்ளார் . மேலும் இந்நிலையில் யாழ்...

முன்னாள் இராணுவ சிப்பாய் தாக்கப்பட்டு கொலை

கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தில் திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரிக்க சென்ற 32 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ சிப்பாயின் வீட்டிற்குள் நுழைந்த சில சந்தேக நபர்கள் இவரது மனைவியின் தங்க மாலையை திருடிச்சென்றுள்ளனர். இது தொடர்பில் குறித்த...

இலங்கைக்கு கிடைத்துள்ள அமெரிக்க டொலர்கள்

இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான நிதி ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்த கடன் வசதியை பெற்றுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும்...

ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் இன்றைய தினம் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கமைய இன்றைய தினம் 2 காலிறுதிப்போட்டிகளும் நாளைய தினம் 2 காலிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இன்றைய நாளின் முதலாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகள் மோதுகின்றனர். இப் போட்டி மாலை 05 மணியளவில் அஹமட் பின் அலி மைதானத்தில்...

நைரோபியில் பாரிய எரிவாயு வெடி விபத்து.

கென்யா தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் எம்பகாசி மாவட்டத்தில் எரிவாயுசிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், சேதமடைந்துள்ளதையும் தீவிபத்து பல தொடர்மாடிகளிற்கு பரவியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிவிபத்துக்கள், தீப்பிளம்புகள், மேலும் ...

யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு

யாழில் மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம்(02) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதன்போது அவருக்கு கடந்த 23 ஆம்...
- Advertisement -

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...