நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுற்றுலாத் துறை மற்றும் விருந்தகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முக்கியமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் தரங்களுக்கு இணங்க, எதிர்வரும் 2 மாதங்களுக்குத் தேவையான உறைந்த காய்கறிகளை (Frozen Vegetables) தட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சுற்றுலாத் துறையில் உள்ள விருந்தகங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கான உணவுப் பொருட்களைத் தடையின்றி வழங்குவது உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here