இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து முதல் முப்பது J-35A ஜெட் விமானங்களைப் பெறவுள்ளது. இதேவேளை பாகிஸ்தானுக்கு சீனா தனது போர் விமானங்களை 50% தள்ளுபடியுடன் வழங்கவுள்ளதுடன் எளிதாக கட்டணம் செலுத்தும் முறையிலும் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.








