கடன் மறுசீரமைப்பின் மற்றுமொரு நன்மையைக் குறிக்கும் வகையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையில் தமது திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான நிலையத் திட்டத்தில் சீன நிறுவனங்களின் ஆர்வம் இருந்தபோதிலும், ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், நிதிச்சுமையில் உள்ள மத்தள விமான நிலையத்தின் நிர்வாகம் விரைவில் ரஷ்யா மற்றும் இந்தியா கூட்டு முயற்சியில் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் 69 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.