சந்தையில் தற்போது நிலவும் Laughs எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்க்கப்படும் என Laughs Gas PLC அறிவித்துள்ளது.

Laughs Gas PLC இன் தலைவர் கலாநிதி டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய, விநியோகப் பிரச்சினைகளால் தீவின் பல பிரதேசங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக Laughs நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுக் களஞ்சியங்கள் தாமதமானதாகவும், பிரதான Laughs முனையம் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நேற்று (28) Laughs நிறுவனத்திற்கான எல்பி எரிவாயு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என Laughs Gas PLC இன் தலைவர் டொக்டர் டபிள்யூ.கே.எச்.வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here