2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணியின் தலைவரை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று அறிவிக்கவுள்ளது.

அணியின் தலைவராகத் தெரிவு செய்யப்படவுள்ளவர்களின் பட்டியில் விராட் கோலியின் பெயர் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தலைவராக வழிநடத்தினார்.

பின்னர் அந்த பதவியிலிருந்து அவர் விலகிய போதிலும் 2023ஆம் ஆண்டு மூன்று போட்டிகளுக்குத் தலைவராகப் பதவி வகித்தார்.

விராட் கோலிக்கு அடுத்தபடியாக குறித்த பட்டியலில் ரஜத் படிதர் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை அணியின் தலைவராகச் செயற்பட்ட ஃபெஃப் டு பிளெசிஸை இந்தமுறை தக்கவைத்துக் கொள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தவறியுள்ள நிலையில் புதிய தலைவர் இடம்பெறவுள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here