ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு பௌத்த நாடு அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கிறது, குறுகிய கால நன்மைகள், சலுகைகள் அல்லது பதவிகளுக்காக SLPP நாட்டை அல்லது கட்சியை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது என்றும் எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் நாமல் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here