Saturday, May 9, 2026
No menu items!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் என்பதை முன்னரே அறிவித்த ஜனாதிபதி ரணில்…!!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் என்பதை முன்னரே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்ததாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார். இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட #AskRanilLive என்ற நேரடி கேள்வி பதில் அமர்வின் போது  ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியை நேரலையில்...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான  உத்தியோகபூர்வ அறிவிப்பு…!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறாத போதிலும், அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, அது எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கடவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – அபி கம்பஹா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்...

ரணிலுக்கு ஆதரவளிக்கும் பிரதமர்…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன இறங்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது. தமது கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றாததால் அவருக்கு ஆதரவளிக்கக்கூடாதெனவும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவை களமிறக்கவேண்டும் எனவும் மொட்டுக் கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையிலேயே தம்மிக்க பக்கம் சாயாது, மொட்டுக்...

வெற்றியை இழக்க நேரிடும் ஜனாதிபதியின் கருத்து..!!!

சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்தமையே நாடு வங்குரோத்தடைவதற்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இறக்குமதிக்காக பாரியளவில் கடன்கள் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். சரியான பொருளாதாரக் கொள்கைகளால், நாடு தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து...

பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அமைச்சரவையின் அவதானம்…

சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை மனித தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான விடயங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு தேவையான புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (10.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களை...

தேசிய அரசாங்கத்திற்கு இடமில்லை: மொட்டு உறுதி..!

தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுவாராயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளது. தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறானதொரு நகர்வுக்கு ஒத்துழைத்தால் அது கட்சிக்கு மேலும் பின்னடைவாக அமையக்கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தேசிய அரசமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர்...

கல்விக்கு இடையூறு விளைவிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி.!!

பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவிதமான நாசகார செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை...

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் உத்தரவு…!!  

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ஜுலை இரண்டாம் வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் தருணத்தில் பண்ணையாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் சம்பந்தமாக ரணில் செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

காணி உறுதி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கோரிக்கை…

உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் எனவும் சிலர் அதனை குழப்புவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது என கூறியதோடு அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 20 லட்சம் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை...

நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

பொக்ஸ் ஒபீஸில் 50 நாட்களை கடந்த ‘துரந்தர் 2’

பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர். அந்த படம் உலகம் முழுவதும் சுமார்...
- Advertisement -spot_img