Tuesday, May 26, 2026
No menu items!

நாடாளுமன்றம்

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் சிதறுண்டு காணப்படுகின்றனர்–சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு…!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும் சின்னங்களுக்கு அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் இதனூடாக அவர்களிடம் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கான தூரரோக்கு...

அரசியல் செய்ய எனக்கு இரண்டு வருட சம்பளம் போதும்; வைத்தியர் அர்ச்சுனா…!

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.10) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு...

கடுமையான கருத்துக்களை தெரிவித்தமைக்காக மன்னிப்பு கோரிய பிரதமர்!

நாடாளுமன்றத்தில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் (Anthony Albanese) மன்னிப்பு கோரியுள்ளார். டூரெட் (Tourette) எனப்படும் நரம்பியல் நோய் அறிகுறிகள் உள்ளதா? என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அண்மையில் கேலியாகக் கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதனை மீளப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையிலே, அவுஸ்திரேலிய பிரதமர்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகள் இரத்து!

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் வெளியிட்டுள்ள கருத்து!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமாயின், சாதாரண கடவுச்சீட்டின் மூலம் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், இராஜதந்திர கடவுச்சீட்டுகள், கொடுப்பனவுகள், தொலைபேசி கொடுப்பனவுகள் உள்ளிட்ட சலுகைகளும் ரத்து...

காணாமல் போயுள்ள 4000 வாகனங்கள்…!

சுகாதாரம், கல்வி , தபால் , நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4000 வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தேசிய கணக்காய்வு அலுவலகம் அனைத்து அரச வாகனங்களும் உள்ளடங்கும் வகையிலான விசேட கணக்காய்வை நேற்று (27.09) ஆரம்பித்துள்ளது. இந்த கணக்காய்வின் பின்னர் காணாமல் போயுள்ள அல்லது...

ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது. 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினராக 5 வருடங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். அதேநேரம் 9ஆவது நாடாளுமன்றம்...

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு திறைசேரியில் இருந்து ஜனாதிபதியினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும்...

தண்டனை குற்றவியல் திருத்த சட்டத்தில் மாற்றம்- அமைச்சரவை அனுமதி..!

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்களின் முயற்சிக்காக...

செப்டம்பர் 22 ஆம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்படும்: NPP திட்டம்…

ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தி, செப்டம்பர் 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க NPP உத்தேசித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். “இந்த திருடர்களுடன் ஒரு நாள் கூட ஈடுபடுவதற்கு நாங்கள் எந்த காரணத்தையும் காணவில்லை. புதிய அமைச்சரவை மற்றும் செயலாளர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட எந்தவித வாய்ப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெட்டிகுமாரகே தெரிவித்துள்ளார். ஜூலை இறுதி வரை பயன்படுத்த கூடிய...
- Advertisement -spot_img