Tuesday, May 26, 2026
No menu items!

நாடாளுமன்றம்

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு விஜயம்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17.12.2024) இரவு நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆவணம்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனைத்து கல்வித் தகுதிகளையும் இன்று (டிசம்பர் 18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார். “அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ என்னிடம் பட்டச் சான்றிதழை முன்வைக்குமாறு கோரினார். காலை நான் இந்த சபையில் நான் பெற்ற அனைத்து கல்வித் தகுதிகளையும் முன்வைக்க உத்தேசித்துள்ளேன். பட்டச் சான்றிதழ்...

நாடாளுமன்ற அமர்வு இன்று- அடுத்த சபாநாயகர் யார்?

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...

மீண்டும் நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை (17) கூடவுள்ளது அதன்படி, தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாளை காலை 9.30 முதல் 10.30 வரையான நேரமானது வாய்வழி பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு முன்னதாகவே ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய சபாநாயகர் தெரிவு, அமர்வின்...

அசோக ரன்வலவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை-பாரிய சிக்கலில் ஐக்கிய மக்கள் சக்தி..!

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒழுக்க நெறியை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவி விலகியுள்ள...

நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளுடன் ஏராளமானோர்..!

தற்போதைய நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளை முன்வைத்து மோசடி செய்பவர்கள் ஏராளமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி, ஆறு போலி வைத்தியர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “படிப்பறிவில்லாதவர்கள் காணப்படும் நாடாளுமன்றத்திற்கு பதிலாக படித்தவர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதாக கூறியே, இந்த அரசாங்கம்...

தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த 2020...

மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு..!

மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33346 வாக்குளை பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் ஜீவன் தொண்டமான்...

மட்டக்களப்பில் இரவில் மக்களை மிரட்டி வாக்குள் பெற முயற்சி; த.சுரேஸ்…

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குளை பெற்ற ஒட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை மிரட்டி வாக்குகளை பெறுவதற்கான கூட்சமங்களில் ஈடுபடுகின்றனர். எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலை கவனமாக கையாளவேண்டும். அதேவேளை  தேர்தலை ஜனநாயக முறையில் நடாத்த தேர்தல் திணைக்களம், ஜனாதிபதிதேர்தல் கண்காணிப்பு குழு அமைப்புக்கள் பெவரல்...

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பேருந்துக்கு ஏற்பட்ட நிலைமை நாட்டிற்கும் ஏற்படலாம்; ரணில்…!

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பேருந்துக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு அனுபவம் உள்ளவர்களை தெரிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அனுபவம் மிக்க தலைமைத்துவம் இல்லாவிட்டால் இலங்கை மீண்டும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் அனுபவம் மிக்கவர்கள் குறைவு என தெரிவித்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

ஜூலையில் வெளியாகிறது அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படம்

ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'இதயம் முரளி' படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் பெயர்...
- Advertisement -spot_img