அதிவிசேட வர்த்தமானி
உள்நாட்டுச்செய்திகள்
மின்சாரம் வழங்கல் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளும் தற்போது அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, அதிவிசேட வர்த்தமானி ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த வர்த்தமானி வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டு இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகள்
சமாதான நீதவான் நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
சமாதான நீதவான் நியமனம் தொடர்பான கட்டளைகள் பலவற்றைத் திருத்தி, நீதி அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு இந்த வர்த்தமானியின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தமானியில் நிர்வாக மாவட்டங்களுக்கான சமாதான நீதவான் நியமனத்தின் போது 30 வயதுக்குக் குறையாத மற்றும் 75 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க...
உள்நாட்டுச்செய்திகள்
காவல்துறையின் அதிகாரங்களைத் திருத்தியமைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு..!
இலங்கை காவல்துறையின் அதிகாரங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறை இடமாற்றங்கள், இடைநிறுத்தங்கள் மற்றும் ஒழுக்காற்று தொடர்பாக இலங்கை காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் திருத்தியமைத்து அல்லது நீக்கி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வர்த்தமானி அறிவிப்பு ஜூன் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு ரூ.74 முதல் ரூ.160 வரை செலவிடலாம் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகள்
வாகன இறக்குமதியில் சிக்கல்..!
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பதி மெரெஞ்சிகே தெரிவித்தார்.
சுமார் 5 ஆண்டுகளாகத் தற்காலிகமாகத்...
புதிய செய்திகள்
வெளிநாட்டு தத்தெடுப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி!
2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தத்தெடுப்புகளை 100 ஆகக் கட்டுப்படுத்தும் வர்த்தமானி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், 2025 ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான தத்தெடுப்பு உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிறுவர்களைத்...
புதிய செய்திகள்
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி!
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த...
இலங்கை அரசியல்
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க – வெளியான வர்த்தமானி..!
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதேவேளை ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்ட விடயம் கட்சி தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் தெரியாது என்றும் அது கட்சியின் செயலாளர் தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் எனவும் கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாளை கட்சி...
புதிய செய்திகள்
பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நவம்பர் 21 ஆம் திகதி கூடவுள்ள பத்தாவது பாராளுமன்றம்!
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத் தொடர்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான எதிர்வரும் பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் பொது வாக்கெடுப்பின் மூலம்...
Top
ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!
அரசியலமைப்பின் 44 ஆவது சரத்தின் உப சரத்து (1) இன் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
Latest News
வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு
மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின்...


