புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதேவேளை ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்ட விடயம் கட்சி தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் தெரியாது என்றும் அது கட்சியின் செயலாளர் தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் எனவும் கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாளை கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவுசெய்யபட்டுள்ளதாக அவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here