Wednesday, June 10, 2026
No menu items!

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் மண்சரிவு!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பாதையின் ஒருமருங்கு போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. <!-- -->

நமுனுகுல வனப்பகுதியில் தீ விபத்து!

பதுளை, நமுனுகுல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பசறை-பதுளை சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ, பாதுகாக்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதியை அழித்துள்ளது. தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்தது..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இன்று  புதன் (27.11.2024) காலை வரை 15 ஆயிரத்து 205 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 487 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 1240 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 128...

வட மாகாணத்தில் கடும் மழையினால் அதிகளவானோர் பாதிப்பு!

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சுமார் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.    

யாழ் மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 111 குடும்பங்களைச்...

மன்னாரில் கடும் மழை; வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்…

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) புதன் இரவு முதல் இன்று வியாழன் (24.10) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல  பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம்,சௌதார்,எழுத்தூர் ,மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள்...

மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் தூக்கி வீசப்பட்ட வீட்டின் கூரை…!

மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிப்படைந்துள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு ஜே/162 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்ட நிலையில் வீட்டுக்குள் வெள்ளமும்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img