Friday, November 20, 2026
No menu items!

அனுரகுமார திசாநாயக்க

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் வேதன அதிகரிப்பு; ரொஷான் ராஜதுரை!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் மாத்திரமே வேதன அதிகரிப்பொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பாதீட்டு உரையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனமாக பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என முன்மொழியப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர்...

வரவு செலவு திட்ட விவாதத்தின் 6வது நாள் இன்று!

பட்ஜெட் உரை என்று அழைக்கப்படும் ஒதுக்கீட்டு மசோதாவின் 2வது வாசிப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தின் 6வது நாள் இன்று. இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது. இரண்டாவது வாசிப்பு அல்லது பட்ஜெட் உரை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இலங்கையின் 79வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இரண்டாவது வாசிப்பு...

ரணிலின் பாதீடே சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது – கபீர் ஹாஷிம்..!

ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பாதீட்டை சற்று மாற்றியமைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இம்முறை பாதீட்டை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி நடந்து கொண்ட விதத்திற்காக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறியுள்ளார். கடந்த 76 வருட சாபம் எனத் தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி சாபம்...

யாழ் நூலகத்தின் சேகரிப்பை டிஜிட்டல் மயமாக்க பரிந்துரை;  யாழ் மாவட்ட அமைப்பாளர்!

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண நூலகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.100 மில்லியன் ஒதுக்கியதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் நன்றி தெரிவித்துள்ளார். ஒரு அறிக்கையை வெளியிட்ட கீதநாத் காசிலிங்கம், மிகவும் யதார்த்தமான மற்றும் புதுப்பித்த அணுகுமுறையை மேலும் முன்மொழிந்தார், இந்த நிதியின்...

சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு விபரம்!

சுகாதாரத் துறைக்கான அரசாங்கத்தின் ஒதுக்கீடு கணிசமாக 604 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2025 பட்ஜெட்டில் இருந்து ரூ.185 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொதிகளை வழங்குவதற்காக ரூ. 7.5 பில்லியன் ஒதுக்கப்படும், மேலும் ரூ. 5 பில்லியன் 'திரிபோஷா'...

வரவுசெலவுத் திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் முன்மொழிவுகள்!

பொதுமக்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்த ஜனாதிபதி, 2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிதி பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்குள் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன்...

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி – விளைவுகள் என்ன?

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்தல் உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து...

நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்; ஜனாதிபதி!

நாட்டில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான சுதந்திரத்தினை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு - சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை...

நாளை நடைபெறவுள்ள  77வது சுதந்திர தின கொண்டாட்டம்!

"தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்...

வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் !

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, தொழில்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img