Friday, November 20, 2026
No menu items!

அனுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..!

தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிராமிய வறுமையை ஒழித்தல், 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி...

ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கல்..!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். சமாதானம், மனித உரிமைகள் மனிதாபிமான விவகாரங்கள் குறித்த அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் அவரது அசாதாரண வாழ்க்கை வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதியை ஊக்குவிக்கும் ஜிம்மி கார்ட்டரின்...

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி..!

வலுவானதும் நிலையானதுமான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட அரசியல் கலாசாரம், மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்குவதற்கு இந்தப் புனித நத்தார் தினத்தில் அனைவரும் உறுதி பூண வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சகல...

சீனா பறக்கவுள்ள ஜனாதிபதி..!

ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்றையதினம் (20.12.2024) கண்டியில் மகாசங்கத்தினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்காதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – ஜனாதிபதி எச்சரிக்கை..!

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க முடியாவிடின், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும்...

ஜனாதிபதிக்கும்  உலக வங்கியின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து...

2025 ஆம் நிதியாண்டுக்கான சட்டமூலத்தை முன்வைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

2025 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, 2025ம் நிதி ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம்...

இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார்; சீனா தெரிவிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் எனச் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய...

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தி, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எமக்கு சிறந்த கடல் வளம் காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக மையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று விவசாயிகள்...

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை;ஜனாதிபதி தெரிவிப்பு!

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்தார். தொடர்ந்தும் தமது கொள்கை உரையில், மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img