அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

சமாதானம், மனித உரிமைகள் மனிதாபிமான விவகாரங்கள் குறித்த அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் அவரது அசாதாரண வாழ்க்கை வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதியை ஊக்குவிக்கும் ஜிம்மி கார்ட்டரின் முயற்சிகளை 2002ம் ஆண்டு அமைதிக்கான நோபால் பரிசை அவருக்கு வழங்கியதன் மூலம் உலகம் அங்கீகரித்தது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவரது பாரம்பரியம் அனைவருக்கும் சிறந்த உலகை உருவாக்குவதற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்காக விளங்கட்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here