Friday, November 20, 2026
No menu items!

அனுரகுமார திஸாநாயக்க

எதிர்க்கட்சியின் புதிய தீர்மானம்!

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உட்பட பல பாராளுமன்ற குழுக்களில் பிரதிநிதிகளை நியமிப்பதையோ அல்லது உத்தியோகபூர்வமாக பங்கேற்பதையோ தவிர்ப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற குழுக்களில் தமது பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வரை எதிர்க்கட்சிகள் பங்குபற்றுவதை தவிர்க்கும் என எதிர்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கூறியதாக   தெரிவித்துள்ளது . நாடாளுமன்ற அலுவல் குழு, பொது நிறுவனங்களுக்கான...

சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ள இலங்கை ஜனாதிபதி!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலைத் தொடர்ந்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய வாகனம் வாங்க காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல்..!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதால், இலங்கை மக்களுக்கு புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (18.12.2024) முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு இந்திக சம்பத் மெரிஞ்சகே தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அவர்,...

ஜனாதிபதியின் இந்திய விஜயம் நாளை..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அரசுமுறை விஜயமாக நாளை (15.12.2024) புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியத் தலைநகரில் இடம்பெறவுள்ள வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி...

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்கள்!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும்  நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர். புதிய தூதர்கள் புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு, ஜார்ஜியா, பெலாரஸ் குடியரசு, ஆர்மீனியா குடியரசு, ஸ்பெயின் இராச்சியம், காங்கோ குடியரசு மற்றும்...

ஜனாதிபதியினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின்...

இலங்கையின் பிளவுபட்ட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது; ஜனாதிபதி!

இலங்கையின் பிளவுபட்ட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது. “இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியலுக்கு இனி அதிகாரம் இல்லை என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது...

நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை சபாநாயகராக நியமிக்க யோசனை!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன்படி, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. ஜனாதிபதியின் கீழ் 3 அமைச்சுகளும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உட்பட 21 அமைச்சர்களும்...

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளது. பதவியேற்பு விழா கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். புதிய நியமனங்கள் பின்வருமாறு; -அமைச்சர்கள் அமைச்சரவை: அனுர கருணாதிலக்க – நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார். கே.டி.லால்காந்த – நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் காணி...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img