Sunday, November 8, 2026
No menu items!

அமெரிக்கா

டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் தெரிவு !

அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆட்சி பொறுப்பேற்றதும் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுவதற்கு புளோரிடா மாநில பிரதிநிதி மைக் வால்ட்ஸை ட்ரம்ப் தெரிவு செய்துள்ளார். 50 வயதான மைக் வால்ட்ஸ் ஓய்வு பெற்ற இராணுவ பாதுகாப்பு அதிகாரி மற்றும் போர் வீரர் ஆவார்.

தோல்வியை ஒப்புக்கொண்ட கமலா ஹரிஸ்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய துணைத் தலைவர் கமலா ஹரிஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டார். தோல்விக்குப் பிறகு, அவர் வாஷிங்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் முன்னிலையில் நாட்டு மக்களுக்கும் உரையாற்றினார். அப்போது, ட்ரம்பின் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாரிஸ், ட்ரம்புடன் அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்துக்குத் தயாராக...

டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு!

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கலந்துரையாடலில் நிர்வாகத்தை மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்துவதாக உறுதியளித்தமையானது தொழிற்துறையினர் மத்தியில் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, நேற்றையதினமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியானார் டொனால்ட் ட்ரம்ப் . அமெரிக்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய தினம் முடிவடைந்து இன்று டொனால்ட் ட்ரம்ப் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றதையடுத்து தனது வெற்றியுரையையும் ஆற்றுகிறார்.  

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் இன்று!

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை இன்று (நவ. 5) நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்திவந்தாா். இருந்தாலும்,...

பன்றிக்கு பரவிய பறவைக் காய்ச்சல்…!

அமெரிக்காவில் முதன்முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பன்றியுடன் இருந்த மேலும் இரண்டு பன்றிகளுக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் ஆய்வுக்காக  அனுப்பப்பட்டுள்ளது என்றும் இந்த...

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைப்பு!

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் போட்டியிடுகின்றனர். சிறப்புரிமை மூலம் தபால் வாக்கு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும்...

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவை செய்த ஜோ பைடன்!

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய...

ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் உள்ள ரேடியோ டவர் மீது தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (20) இரவு மோதியது. மோதிய வேகத்தில் அந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றி எறிந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4...

அமெரிக்கா, பிரிட்டன் வல்லரசுக்கு கோரிக்கை விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி…..!

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற உலக வல்லரசுகளை இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரேல் காஸா பகுதியில் குண்டுவீசத் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது என்பதையும், லெபனா மீது ஹெஸ்புல்லா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையும் கருத்தில் கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி சக மேற்கத்திய நாடுகளிடம் இந்தக்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img