அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களிக்கக் காத்திருந்தவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்ற ஜோ பைடன் அவர்களுடன் சகஜமாகப் பேசினார்.

தொடர்ந்து 40 நிமிட காத்திருப்புக்கு பின்னர் இறுதியில் தனது வாக்கினை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here