அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த தாயார் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, உயிரிழந்த தாயாரின் இரண்டரை வயது குழந்தை, இரும்பு ஆணி ஒன்றை எடுத்து அருகிலிருந்த மின் இணைப்பில் பொருத்தி விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த எட்டு வயது குழந்தை, உயிரிழந்த தாயாரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

பின்னர், இந்த தாயார் உடனடியாக தனது குழந்தைகளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று, மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஆணியை வெளியே எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தாயாரின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here