அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவர் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வலஸ்முல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை தெனியாய பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 02 உள்நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 02 கத்திகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் யுவதியும் நீண்ட காலமாகக் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், யுவதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபருடனான காதல் உறவை முறித்துக் கொண்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த சந்தேக நபர் இந்த யுவதியைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here