Saturday, April 25, 2026
No menu items!

அரிசி

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை;  ஜனாதிபதி!

சில சந்தைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அரிசி கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில விற்பனை நிலையங்களில் பங்குச் சிக்கல்கள் ஏற்பட்டாலும், நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஒத்துழைக்க அரசாங்கம்...

அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

அரிசி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் தொடர்பில் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு!

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிசியின் விலையைக்...

அதிகரித்துள்ள அரிசியின் விலை!

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர். இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய்...

நாட்டை காப்பாற்ற என்னால் மட்டுமே முடியும் ; ரத்நாயக்க!

பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை என ஜனாதிபதி வேட்பாளரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று திங்கட்கிழைமை  (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில் , பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை. எனது சொத்துக்கள் அனைத்தையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளேன். பில்லியன் ...

கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்களுக்கு சீனா அரிசி நன்கொடை வழங்கும் செயற்றிட்டம்!  

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று(24) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(16) கனர வாகனமொன்றில் கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது. இந்நிலையில், குறித்த அரிசி வழங்கும் மாவட்ட நிகழ்வு பூநகரி கடற்றொழில் அலுவலகத்தில் இன்றைய தினம்...

சீன அரசாங்கத்தின் நன்கொடை அரிசி கிளிநொச்சியை வந்தடைந்தது!

இலங்கைக்கு  சீன அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் இன்று16.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது. இந்த அரிசி கடற்தொழில் திணைக்களம் ஊடாக 2,978கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும் எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, பூநகரி, நாச்சிக்குடா ஆகிய நான்கு கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக இந்த அரிசி...

திருகோணமலை பிரதேசத்தில் அரிசி வழங்கும் நிகழ்வு  !

அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட  அரிசி வழங்கும் நிகழ்வு  நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற போது திருவண்ணாமலை பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. வெள்ளை மணல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சுமார் 835 குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி பொதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் Gs. அபிவிருத்தி உத்தியோகத்தர்  மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இலவச அரிசியால் உயிரிழந்த கோழிகள்..!

ரிதிகம பனகமுவிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி சிலவற்றை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன. சுகாதார அதிகாரிகள் முன்வைத்த இச் சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கையை உடனடியாக வழங்குமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரிசியை உண்ட கோழிகள் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்ததாக வீட்டு உரிமையாளர் பொது சுகாதார அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img