அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கான மே மாத உதவித் தொகை வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், குறித்த உதவித் தொகை உரிய குடும்பங்களுக்கு சொந்தமான அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இன்று புதன்கிழமை (28.05.2025) வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, 592,766 பயனாளிகளுக்கு ரூ. 2,963,830,000 தொகை உரிய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

குறித்த உதவித் தொகை 70 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கு வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here