Thursday, April 23, 2026
No menu items!

ஆதார வைத்தியசாலை

அம்பாறையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (13) முற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு சென்னக்கிராமம் பகுதியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த போது மலையடிக்கிராமம் 03 பகுதியில் வசித்த (வயது 60) நபரே இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை...

நேருக்கு நேர் மோதிய பாரவூர்திகள் – ஒருவர் பலி..!

அநுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (14.12.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த சிறிய பாரவூர்தி ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நபர் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக 26.11.2024 அன்று பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று திரவந்தியமேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலமொன்றை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் யார் என்று  அடையாளம் காணப்படவில்லை.பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம்...

திடீர் ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

 ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று திடீர் ஒவ்வாமை காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (25) பிற்பகல் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. கழிவறைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் திரவத்தினால்  இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் புதிய எலுவாங்குளம் ஐலிய கிராமத்தில் இன்று (17) அதிகாலை 2 மணியளவில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும் அவர் தோட்டமொன்றின் காவலாளியாக கடமை புரிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த மரணம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார்...

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் உயிரிழப்பு! 

பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் சுவாசிப்பதற்குச் சிரமம் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறிய தாதி பணி நீக்கம்!

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறியதாக கூறப்படும் தாதி ஒருவர் அந்த நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக களுத்துறை மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்வு மையம் தெரிவித்துள்ளது. ஹொரணை ஆதார வைத்தியசாலையின் உதவித் தெரிவு அதிகாரி ஷானக திரிமான்ன அவர்களின் பணிப்புரையின் பேரில், குறித்த...

வைத்தியர் அர்ச்சுனா தற்கொலையா.?

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பி தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதான அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை செப்டம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான்...

புகையிரதத்துடன் வேன் மோதி விபத்து!

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற அதிவேக புகையிரதத்துடன் அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திலிருந்து கீனதெனிய புகையிரத கடவையில் வேன் ஒன்று மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த சாரதி வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது டிரைவர் மட்டும் வேனில் இருந்துள்ளார். எனினும் வேன் பலத்த சேதமடைந்தது. ரயில் தண்டவாளத்தில் இருந்து வேன் அகற்றப்பட்ட பிறகு ரயில் மீண்டும்...

அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் நீடிப்பு!

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள்  சாவகச்சேரி நீதிமன்றில், நீதவான் அ.யூட்சன் முன்னிலையில் நேற்றைய தினம் (31) விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட  காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட ஐந்து(5)வழக்குகளே விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தன. இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img