Monday, June 15, 2026
No menu items!

இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சருடன்  ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்!

ஓமானில் நடைபெற்ற 8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.    

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும்...

இந்திய வெளிவிவகார அமைச்சர் 09 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதன்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும் 09 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு...

அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை உன்னிப்பாக அவதானித்து வரும் வெளிநாட்டுத் தூதரகங்கள்…!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிந்தது. அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுமா, இந்தியாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுமா அல்லது அமெரிக்க சார்பு நிலைப்பாட்டில் இயங்குமா என்பதை இவ்வாறு தூதரகங்கள் அவதானித்து வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம்...

தமிழ் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்..!

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (4) இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பினார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இராஜதந்திர மட்டத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்த எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

விரைவில் இந்திய விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

இலங்கைக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளை கையளித்திருந்தார். இதன்போது டெல்லி விஜயத்துக்கான பிரதமர் மோடியின் அழைப்பையும் வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார விரைவில் இந்திய விஜயத்துக்கான அறிவிப்பை...

விஜித ஹேரத்தை சந்தித்த எஸ் ஜெய்ஷங்கர்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர். கொழும்பிலுள்ள வெளிநாட்டமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று (04) காலை நாட்டை வந்தடைந்துள்ளார். அவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதன்போது கடந்த காலங்களில் இந்திய - இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகக்...

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகை!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அமைச்சரின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் அக்டோபரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது விஜயத்தின் போது, ​​எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் புதிய நிர்வாகத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் ஜனாதிபதித்...

மோடியின் இலங்கை விஜயம் திடீரென ரத்து…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடியில் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 20ஆம் திகதி மாதம் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமரின் விஜயம் குறித்து ஆய்வு செய்திருந்தார். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுடனான இருதரப்பு...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img