Monday, September 28, 2026
No menu items!

இலங்கையர்

வெளிநாட்டு மோகம் – கனடா செல்ல முயன்ற 11 பேர் கைது..!

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் நேற்று (24/03/2025) பிற்பகல் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கனடாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான...

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க முடிவு – வெளிவிவகார அமைச்சு..!

மியன்மாரில் இணையவழி மோசடி முகாமில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கையில் சீனா மற்றும் தாய்லாந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருவதுடன், கூடிய விரைவில் எஞ்சியுள்ள 14 பேரையும் இலங்கைக்கு அழைத்த வரப்படுவார்கள் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தள்ளது. மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் 56 இலங்கையர்களில்  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் அடங்கிய...

ஜனாதிபதி தலைமையின் கீழ்  முக்கிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் மூன்று முக்கிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கை டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி ஒரு பெரிய படியை எடுத்துள்ளது. திட்டங்களில் டிஜிட்டல் அரசாங்க கட்டண தளமான GovPay, பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியைப் பரவலாக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச்...

புதிய திருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் அணிதிரள்வோம்; ஜனாதிபதி!

மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு...

புனித ஹஜ் யாத்திரைக்காக ஆயிரக்கணக்கான இலங்கையர்களை அனுப்ப ஒப்பந்தம்!

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் அந்த நாட்டின் ஹஜ் யாத்திரைக்கான பிரதியமைச்சர் அப்துல்ஃபட்டா பின் சுலைமான் மஷாட் (Abdulfattah bin Sulaiman Mashat) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்போது, புனித ஹஜ் யாத்திரையில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகள் மற்றும் யாத்திரையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

விமானத்தில் குழறுபடி செய்த இலங்கை பயணி- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் குழப்பகரமாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். 41 வயதான குறித்த இலங்கையர், நேற்றைய தினம் (18) விமானத்தில் பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொள்ள முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைதானார். அவர் இன்று (19) ப்ரோட்மீடொவ்ஸ் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான செய்தி!

இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது அங்கு நிலவி வரும் போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. போர் இடம்பெற்று வரும் பகுதிகளில் உள்ள இலங்கையர்களைப்...

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்….!

சுவிஸ் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர்  ஒருவர் சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சடலமானது இன்று (19) காலை சுவிஸ் - கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கோபிநாத் என்ற 34 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குடியிருப்பு Airbnb நிறுவனத்தால் வாடகைக்கு விடப்பட்டது எனவும், அவசர...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img