Friday, April 24, 2026
No menu items!

இலங்கை போக்குவரத்து சபை

ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீண்டும் சேவையில்..!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மண்டூர் – மட்டக்களப்பு பேருந்து சேவை மீள ஆரம்பம்..!

இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மீண்டும் இன்று சனிக்கிழமை (01.02.2025) அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மண்டூர் பகுதியிலிருந்து இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு...

இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் வெற்றிடங்கள்!

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதி அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார். மேலும், அதன் அடுத்த கட்டமாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும்...

பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பேருந்து சேவை..!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை இன்று (1/21/2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் தொடர்பாக மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்புக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் கவனத்திற்கு...

இ.போ.ச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் – பின்னணி என்ன?

யாழ்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழச்சேனையில் இருந்து இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மீது வாழைச்சேனை சுங்கான்கேணி 18 வது மையில் பிரதேசத்தில் இனம் தெரியாதோரினால் கல்வீச்சு தாக்குதலால் இரு பேருந்துகள் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த சம்பவம் புதன்கிழமை (15/1/2025) இரவு 07.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவை!

நீண்ட வார விடுமுறையை கருத்தில் கொண்டு இன்றைய தினத்திலிருந்து சிறப்பு பேருந்து சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்காக சொந்த இடங்களுக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிவனொளிபாத மலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹட்டனுக்கு கூடுதல்  பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   <!-- -->

தைப்பொங்களுக்கு விசேட போக்குவரத்து…!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மேலதிக பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை...

வெளிநாட்டு பிரஜையின் பயணப்பை மாயம் – தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார்..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஜனக பெர்னாண்டோ மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர். எல்லவுக்குப் பயணம் செய்த 39 வயதுடைய சுற்றுலாப் பயணியின் பயணப்பை வட்டவளை மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் காணாமல்...

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை..!

நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (24.12.2024) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட தூர பயணங்களுக்கு சுமார் 50 மேலதிக பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக...

பேருந்து விபத்தில் ஐவர் காயம்..!

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி  விபத்துக்குள்ளானாதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தெல்தெனிய டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img