Friday, April 24, 2026
No menu items!

இலங்கை போக்குவரத்து சபை

மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இ.போ.ச சாரதி கைது..!

மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, சந்தேக நபரான சாரதி மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து கண்டி நோக்கி பேருந்தை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் பக்கவாட்டு கண்ணாடியை மோதிவிட்டு பேருந்தை...

நுவரெலியா பேருந்து சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை..!

இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட நுவரெலியா பேருந்து சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அங்கிருந்து 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் களவாடப்பட்டுள்ளது. சம்பவத்தில் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை குறித்த சந்தேக நபர்கள் இந்த நிதியைக் களவாடுவதற்கு அங்கு பிரவேசித்துள்ளனர். நீண்ட காலமாக அவர்கள்...

இ.போ.ச கிளிநொச்சி சாலை ஊழியர்களால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பு…!

நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காமையால் தாம் இன்று (02.12.2024) பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்

வட்டவளை பகுதியில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

வட்டவளை பகுதியில் இன்று (25) காலை தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்தும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும், ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்கும்!

வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து டிப்போ பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளுக்காக 1,300 பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தனியார் பஸ் சேவைகள் குறிப்பிட்ட அளவு வரை மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார்...

உலோகங்களை சர்வதேச போட்டி விலைமனுக்கள் மூலம் அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஆகியவற்றில் உள்ள பழைய உலோகங்களை உள்ளூர் கைத்தொழில்துறையினருக்கான சர்வதேச போட்டி விலைமனுக்கள் மூலம் அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றினால் வருடாந்தம் பாரியளவிலான பழைய உலோகங்கள் சேகரிக்கப்படுகின்றன. சர்வதேச போட்டி ஏல நடைமுறையைப்...

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!

கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று (11.10) காலை இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி...

விபத்துக்குள்ளான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்…!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவாலஹிந்த பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த பஸ்ஸானது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, பஸ்ஸின் சாரதி இங்கினியாகல...

SLTB யின் உறுதியான சேவை முறை..!

பல்வேறு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமது பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பேரூந்து பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தலைவர் லலித் டி அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார். கடினமான மற்றும் கிராமப்புறங்களுக்கு சேவையாற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் தேர்தல் பேரணிகளுக்கு ஒதுக்கப்பட...

ஏற்பட்ட பாரிய விபத்து!

மீன் ஏற்றிச் சென்ற சிறியரக லொறியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று (13) அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியினூடாக, அக்கரைப்பற்றுலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும், மட்டக்களப்பு கல்முனை...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img