Wednesday, July 22, 2026
No menu items!

இலங்கை மின்சார சபை

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சின் இறுதி முடிவு..!

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நிதியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை வௌியிட்ட நிலையில், நேற்று (17/1/2025) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க தீர்மானித்திருந்தது . அதன்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார அலகுகளில், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம்...

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் அறிவிப்பு!

2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறை திருத்தமின்றி தற்போதைய அளவிலேயே மின்கட்டணத்தை பேணுவதற்கு இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியிருந்தது. இதற்கமைய அது...

பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மீண்டும் கடமையில்..!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் 62 பணியாளர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர். வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் விசேட பணிப்புரைக்கமைய அவர்கள் மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம், இலங்கை மின்சார சபையைத் தனியார் மயமாக்குவதற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

சட்டவிரோத மின்சார வேலிகளில் சிக்கி 50 யானைகள் உயிரிழப்பு..!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்களின் ஆதரவு அவசியமாகும். எனவே, சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள...

மின்சார பாவனையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை..!!

இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க இதனைத் தெரிவித்துள்ளார். அதிகளவான இலாபத்தை ஈட்டியுள்ள இலங்கை மின்சார சபையினால் சுமார் 40 சதவீதமான...

இலங்கை மின்சார சபைக்கு கடன் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி..!

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்ட கடனுதவிக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த கடனுடன், நாட்டின் மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பல அத்தியாவசிய திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, மேலும் எதிர்காலத்தில் நாட்டில் கட்டப்படும்...

மின் கட்டணத்தை குறைக்க முடியும் – உண்மையை உடைத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..!

இலங்கை மின்சார சபை இன்னும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்திருந்தாலும் கூட தற்போதைய நிலவரங்கள் மற்றும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை 11 வீதம் தொடக்கம் 23 வீதம் வரையில் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணத்தை குறைக்க...

மின்சார கட்டண திருத்தம்-பொதுமக்களின் கருத்துகள் இன்று முதல்..!

உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களது ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு மின்சாரக் கட்டணங்களை மாற்றமின்றி தொடர்வதற்கு...

இருளில் மூழ்கியுள்ள யாழ். பலாலி வீதி – அரசின் நடவடிக்கை என்ன?

யாழ்ப்பாணம் - பலாலி வீதி, உரும்பிராய் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் மிக நீண்டகாலமாக ஒளிராததால் தாங்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய இரண்டு அரச நிறுவனங்களுக்கும் உரித்தான சுமார் 20க்கும் அதிகமான வீதி விளக்குகள் குறித்த வீதியில்...

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பாக, தனது சொந்த ஆய்வுகள் மற்றும் பொதுமக்களின் கருத்தைப் பயன்படுத்தி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பான இறுதி முடிவுக்கு வரவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை   

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22)சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மதியம்...
- Advertisement -spot_img