Saturday, July 18, 2026
No menu items!

இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு பணிக்காக 148 தாதியர்கள் பயணம்!

இந்த வருடம் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு 2,000 தாதியர்களை அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி தாதியர் பணிக்காகச் செல்லவுள்ள 17 தாதியர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதித்த அமெரிக்கா!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து சர்வதேச நீதிமன்றம் தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிடியாணை...

காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள சிறுவர்கள்-எவ்வேளையிலும் மரணிக்கலாம்..!

உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவை சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 15 மாதகாலமாக நீடித்த இஸ்ரேல் காசா...

இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் செல்லும் இலங்கையர்கள்..

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 பெண்கள் 5 ஆண்கள் என 34 செவிலியர் நிபுணர்களுக்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வேலைவாய்ப்பு பணியகத்தில்...

இஸ்ரேலிய யுவதியை ஹமாஸ் விடுதலை செய்யுமா?

ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகளையும் இஸ்ரேல் 200 பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இந்த முட்டுகட்டை நிலை  எழுந்துள்ளது. ஆர்பெல் யெகுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை விடுதலை...

புதிய நிதியுதவிகளை முடக்கும் அமெரிக்கா..!

அமெரிக்க வெளியுறவுத்துறையானது இஸ்ரேல் மற்றும் எகிப்து தவிர தற்போதுள்ள அனைத்து வெளிநாட்டு உதவி திட்டங்களுக்கும் கிட்டத்தட்ட அனைத்து புதிய நிதியுதவிகளையும் முடக்குவதாக அறிவித்துள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி 2023 இல் 68 பில்லியன் டாலர் செலவழித்த உலகின் மிகப்பெரிய சர்வதேச உதவி நன்கொடையாளரான அமெரிக்கா, ஜனவரி 20 அன்று ஜனாதிபதி டிரம்பின் புதிய நிர்வாக உத்தரவுகளைத் தொடர்ந்து...

காசாவில் உணர்ச்சிமிகு தருணங்கள்..!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பணயக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு எந்தவித தாக்குதல்களும் இடம்பெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 630 வாகனங்கள் காசாவுக்குள் நுழைந்துள்ளன. இஸ்ரேல்...

இஸ்ரேல் பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை-ஹமாஸுக்கு எதிராக மீண்டும் போர்..!

இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால், ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமது நாடு தயார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 8.30 இற்கு ஆரம்பமானது. இந்த நிலையிலேயே, ஊடகங்களுக்கு கருத்துரைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த...

காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை..!

பல மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேலிய அரசாங்கம் ஹமாஸுடனான புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை (19) முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது. ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ், 15 மாத மோதலுக்குப் பிறகு காசாவில் இன்னும் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான...

போர் நிறுத்த ஒப்பந்த வாக்கெடுப்பு – பெஞ்சமின் நெதன்யாகு..!

ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கூடுகிறது. குறித்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் நாளைய தினம் முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நாளை முதல்...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img