xr:d:DAFaElJM0Nc:2,j:46690515125,t:23020910

உயர்தரப் பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள், இனி நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் உள்ள அனைத்து பீடங்களிலும் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த முக்கியமான தீர்மானம் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்களால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மட்டுமே சேர வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், புதிய அறிவிப்பின் மூலம் அந்த வரம்பு நீக்கப்பட்டு அனைத்து பீடங்களுக்கும் வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here