இந்த வருடத்தில் முதல் மூன்று மாதங்களில் 592 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைப்பதற்காக, கொழும்பில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 3 மாதங்களில் இடம்பெற்ற 565 வீதி விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here