Sunday, May 31, 2026
No menu items!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

8 மாவட்டங்களில் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுப்பு..!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்...

செம்மணி விவகாரத்தில் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அணுகுமுறை கேள்விக்குறி – மஹ்ரூப்!

செம்மணி மனிதப்புதைக்குழியைச் சுற்றிய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்துக்கள் விரிவான மற்றும் நேர்மையான அணுகுமுறையை காட்டவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி ஐ.நா. உயர்ஸ்தானிகருடன் தமிழ் தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் பெண்கள் மற்றும் சிறார்கள்...

பட்டலந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை..!

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியாகியுள்ள ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பெற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குச் சமர்ப்பிக்க மனித உரிமைகள் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது. ஏற்கனவே இந்த அறிக்கை வெளிவந்திருந்தாலும் இலங்கை பாராளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய...

நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!

நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த  நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சாட்சியங்களை ஏற்காத இலங்கை; மோசமான செயற்பாடு; சுமந்திரன்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கமைய முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை சேகரிக்கும் திட்டத்தை ஏற்க போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை மிகவும் மோசமான செயற்பாடு என இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் அது...

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிப்பு!

ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (03) தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தைத் தவிர, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவை கூட்டாக தொடர்புடைய வாய்மொழி...

இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா இரட்டை நிலைப்பாடு – ரணில் குற்றச்சாட்டு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் வெளிச்சத்தில் ஐ.நா எடுத்த மாறுபட்ட அணுகுமுறைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா அழுத்தம்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர்!

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ,மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த முக்கிய விவாதங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நான் பிரிட்டனின் நாடாளுமன்ற துணை வெளியுறவுச் செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸ் அவர்களுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினேன்....

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜூர்க் லோபர்...

இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுதா?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்தைய பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பில் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img