ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ,மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த முக்கிய விவாதங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நான் பிரிட்டனின் நாடாளுமன்ற துணை வெளியுறவுச் செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸ் அவர்களுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினேன். ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி வர்சன் அகாபெகியன் மற்றும் பிற தலைவர்களை சந்தித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாளை, நான் UNHRC-யில் உரையாற்றுவேன், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.








