Friday, June 5, 2026
No menu items!

கண்காட்சி

“நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழா மற்றும் ஊடகக் கண்காட்சி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் விமர்சையாக நடைபெற்றது!

இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, அவர்கள் பாரம்பரிய மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இறை வணக்கம் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள்...

போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாடு; பதினைந்தாயிரம் சுற்றுலாபயணிகள்  இலங்கை வருகை!

இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உலகளாவிய போரா மாநாடு மற்றும் கண்காட்சி தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். போரா சமூகத்தின்...

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் விற்பனை சந்தை மற்றும் கண்காட்சி…

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் இரு தினங்களை கொண்ட சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது இன்றைய தினம் (2025.04.10) பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி...

உள்ளூர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்!

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு - பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் நேற்றையதினம் (28.03.2025) வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்றதுடன் பாலம் செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையில் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 15 பெண்...

நவீனமயமான மாநாட்டு மையத்தை நிர்மாணிக்கவுள்ள சீனா; ஜனாதிபதி!

சர்வதேச வர்த்தக உச்சி மாநாடுகள் மற்றும் பாரிய அளவிலான நிகழ்வுகளை நடத்தும் இலங்கையின் திறனை மேம்படுத்தும் நோக்கில், கொழும்பு துறைமுக நகரத்தில் அதிநவீன கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை சீனா நிர்மாணிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார அறிவித்துள்ளார். முழுக்க முழுக்க சீனாவால் நிதியளிக்கப்பட்ட இந்த புதிய வசதி, அளவு மற்றும் செயல்பாட்டில் பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு...

நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்று நல்லூரில் ஆரம்பம்..!

யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும் இணைந்து பங்கேற்ற "நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" என்கிற தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது. நல்லூர் பெருந்திருவிழாவை...

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான சித்திர கண்காட்சி!

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற கண்காட்சியில், பல்வேறு கருத்துக்களை தாங்கிய சித்திரங்கள் வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால்  கண்காட்சி ஒன்று இன்று(26.08.2024)  கிளிநொச்சியில் இடம்பெற்றது. அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்ட கருத்துச் சித்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாபெரும் இலவச கல்வி கண்காட்சி !

எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மாபெரும் இலவச கல்வி கண்காட்சி ஒன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக Jaffna Edu Expo கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.அஞ்சலிகா தெரிவித்துள்ளார். குறித்த கண்காட்சி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்...

யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024 கண்காட்சி!

யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடமாகாண ஆளுநர் ஆகியோர்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img