Monday, June 15, 2026
No menu items!

கலவானை

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்!

கலவானை தெல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மத்துகம வீதியில் பள்ளத்தில் விழுந்து  பாரஊர்தி விபத்து; இருவர் பலி!

கலவானை - மத்துகம வீதியில் அம்பலமஹேன பாலத்துக்கு அருகில் பள்ளத்தில் விழுந்து  பாரஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழைக்கிழமை (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது,  பாரஊர்தியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் நிதி நிறுவனமொன்றில் தங்க நகை திருட்டு..!

இரத்தினபுரி - கலவானை பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து பெருந்தொகை தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியும், தங்கப் பொருட்கள் திணைக்களத்திற்கு பொறுப்பான அதிகாரியுமே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கலவானை பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 33 வயதுக்குட்பட்டவர் என...
- Advertisement -spot_img

Latest News

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம்...
- Advertisement -spot_img