கலவானை – மத்துகம வீதியில் அம்பலமஹேன பாலத்துக்கு அருகில் பள்ளத்தில் விழுந்து பாரஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வியாழைக்கிழமை (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, பாரஊர்தியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







