Wednesday, July 29, 2026
No menu items!

கிரிபத்கொடை

18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் – முன்னாள் இராஜாங்க அமைச்சர்!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் உள்ள அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்ன ரணவீர இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக...

கிரிபத்கொடையில் துப்பாக்கிச் சூடு!

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று (11) அதிகாலை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்றுள்ளார்.  

கிரிபத்கொடையில் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது!

கிரிபத்கொடை- நாஹேன பிரதேசத்தில் உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஐஸ் போதைப்பொருள்...

ஆயிரக்கணக்கான மதுபான போத்தல்கள் மீட்பு!

கிரிபத்கொடை பகுதியில் சுமார் நான்காயிரம் மதுபான போத்தல்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள மதுபான உற்பத்தி நிலையத்தில் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதன்காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட்டுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img